வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார். அவர் உயிரிழந்து விட்டால் வடகொரியாவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்ற எச்சரிக்கையை தென் கொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் தெரிவித்து இருந்தார். அதையடுத்து வடகொரியாவின் அதிபர் இறந்தே விட்டார், ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் போலியானவை, அதிபருக்கு செய்யப்பட்ட இருதய அறுவைச் சிகிக்கை பலனளிக்காமல் அவருக்கு இந்த கதி ஏற்பட்டது எனப் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், வடகொரிய அரசியலில் வெற்றிடம் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் முன்னெச்சரிக்கையாக அதிபரின் தங்கை கிம் யோ ஜாங்குக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன்தினம் அதிபர் கிம் ஜாங் உன் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா பரவல் தடுப்பு, உணவுப் பற்றாக்குறை எனப் பல்வேறு தகவல்களைக் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபரின் தங்கை கிம் யோ ஜாங் கொள்ளாதது தற்போது இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்து அமைச்சரவையில் அவருடைய தங்கைக்கு முக்கிய இடம் கொடுக்கப் பட்டு இருக்கிறது. அனைத்து கூட்டங்கள் மற்றும் வெளி நாட்டு பயணங்களிலும் கிம் யோ ஜாங் கூடவே இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மன அழுத்தம் காரணமாக பொறுப்புகளை கிம் யோ ஜாங்குக்கு பகிர்ந்து அளிப்பதாகக் கூறி சில முக்கியப் பொறுப்புகளை அதிபர் தங்கைக்கு பகிர்ந்து கொடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியது. இதனால் வடகொரிய அரசியலில் கிம் யோ ஜாங் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறார் என்றும் அடுத்த அரசியல் வாரிசாக அதிபர் இவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்திய கிம் யோ ஜாங் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. இதனால் கிம் யோ ஜாங் மயாமாகி விட்டார். சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் தங்கையின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருடைய மாமா ஜாங் சாங் கொல்லப்பட்டதைப் போல கிம் யோ ஜாங்குக்கு நடைபெற்று விடுமோ என்ற சந்தேகத்தையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. காரணம் அதிபரின் மாமா ஜாங் சாங் அந்நாட்டு அமைச்சரவையில் அளவில்லா அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைமை அதிபரின் தங்கை கிம் யோ ஜாங்குக்கும் ஏற்பட்டு விடுமோ என அவராகவே ஊடகங்களில் இருந்து விலகி இருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் எனப் பல கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சற்றுமுன் கொரோனாவுக்கு பலியானார். 

முதல்வர் பழனிசாமி தான் எங்கள் கடவுள்: 24 அரியர் வைத்திருந்த மாணவரின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்

எஸ்பிபி உடல்நிலை: சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: துபாயில் பரபரப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்

சன்னிலியோனுக்கு சீட் கொடுத்த கொல்கத்தா கல்லூரி: டுவிட்டரில் சன்னிலியோன் அடித்த கமெண்ட்

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடிகை சன்னி லியோனிக்கு சீட் கொடுத்து உள்ளதற்கு சன்னி லியோன் டுவிட்டரில் அடித்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது