வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார். அவர் உயிரிழந்து விட்டால் வடகொரியாவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்ற எச்சரிக்கையை தென் கொரியாவின் முன்னாள் தூதர் ஒருவர் தெரிவித்து இருந்தார். அதையடுத்து வடகொரியாவின் அதிபர் இறந்தே விட்டார், ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் போலியானவை, அதிபருக்கு செய்யப்பட்ட இருதய அறுவைச் சிகிக்கை பலனளிக்காமல் அவருக்கு இந்த கதி ஏற்பட்டது எனப் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், வடகொரிய அரசியலில் வெற்றிடம் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் முன்னெச்சரிக்கையாக அதிபரின் தங்கை கிம் யோ ஜாங்குக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப் படுகின்றன என்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன்தினம் அதிபர் கிம் ஜாங் உன் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கொரோனா பரவல் தடுப்பு, உணவுப் பற்றாக்குறை எனப் பல்வேறு தகவல்களைக் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிபரின் தங்கை கிம் யோ ஜாங் கொள்ளாதது தற்போது இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதில் இருந்து அமைச்சரவையில் அவருடைய தங்கைக்கு முக்கிய இடம் கொடுக்கப் பட்டு இருக்கிறது. அனைத்து கூட்டங்கள் மற்றும் வெளி நாட்டு பயணங்களிலும் கிம் யோ ஜாங் கூடவே இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மன அழுத்தம் காரணமாக பொறுப்புகளை கிம் யோ ஜாங்குக்கு பகிர்ந்து அளிப்பதாகக் கூறி சில முக்கியப் பொறுப்புகளை அதிபர் தங்கைக்கு பகிர்ந்து கொடுத்த செய்தி ஊடகங்களில் வெளியாகியது. இதனால் வடகொரிய அரசியலில் கிம் யோ ஜாங் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறார் என்றும் அடுத்த அரசியல் வாரிசாக அதிபர் இவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றும் பல்வேறு கருத்துகள் வெளியாகின.
இத்தனை பரபரப்பை ஏற்படுத்திய கிம் யோ ஜாங் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. இதனால் கிம் யோ ஜாங் மயாமாகி விட்டார். சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் தங்கையின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருடைய மாமா ஜாங் சாங் கொல்லப்பட்டதைப் போல கிம் யோ ஜாங்குக்கு நடைபெற்று விடுமோ என்ற சந்தேகத்தையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. காரணம் அதிபரின் மாமா ஜாங் சாங் அந்நாட்டு அமைச்சரவையில் அளவில்லா அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார் எனக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைமை அதிபரின் தங்கை கிம் யோ ஜாங்குக்கும் ஏற்பட்டு விடுமோ என அவராகவே ஊடகங்களில் இருந்து விலகி இருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் எனப் பல கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments