தினசரி பெட்ரோல்-டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?
- IndiaGlitz, [Wednesday,June 14 2017]
நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகளை பெட்ரோல் நிலையங்களில் உள்ள எல்.ஈ.டி. திரையில் தினசரி மாற்றி அமைக்கப்படும். மேலும் தினசரி விலையை தெரிந்து கொள்ள என்றே இலவச டோல் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயலியான Fuel@IOC என்ற செயலியில் தினசரி விலைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.
மேலும் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களில் லாகின் செய்தும் விலையை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த இணையதளத்தில் உள்ள டீலர்கள் கோட் எண்ணை குறிப்பிட்டு அதாவது RSP< SPACE >DEALER CODE என்று குறிப்பிட்டு 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் பெட்ரோல், டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.