ஓவியா இல்லாத பிக்பாஸ் எப்படி இருக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார் ஓவியா நேற்று வெளியேறியதாக வந்து கொண்டிருக்கும் செய்தியால் ஓவியா ஆர்மியினர் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியாக கருதப்படுகிறது.
ஓவியா இல்லாத பிக்பாஸ், ஜெயலிதா இல்லாத அதிமுக போல் தான் இனி பார்க்கப்படும். நேற்றைய நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்தால் ஓவியா வெளியேற போகிறார் என்ற தகவல் வந்ததும் ஒவ்வொருவர் மனதிலும் ஆனந்தம் துள்ளி குதித்ததை அறிய முடிந்தது. ஆனால் அதை கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் ஓவியாவிடம் வருத்தத்துடனும் பரிதாபத்துடனும் அக்கறையுடனும் பேசுவது போல் நடித்தனர்.
வெளியேற போகிறோம் என்று தெரிந்தும் கூட யாரையும் ஓவியா குறை கூறாமல் தன்னுடன் பொய்யாக சிரிப்பவர்களிடமும் உண்மையான புன்னகையையும், அன்பையும் அவர் வெளிப்படுத்தினார்.
ஓவியா வெளியேறியதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க போவதில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஓவியா இல்லாத பிக்பாஸ் இனி எந்த அளவுக்கு எடுபடும் என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும். பிந்துமாதவியின் வரவால் ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும் என்றாலும் ஓவியா இல்லாத பிக்பாஸ் வெறும் ஜீரோதான். எத்தனை ஜீரோ இருந்தாலும் அதற்கு முன் ஏதாவது எண் இல்லாவிட்டால் அதற்கு மதிப்பு இல்லை.
திமிருடன் கூடிய ஆளுமையுடன் ஒருவர், அடிமையாக ஒருவர், ஜால்ரா போடும் ஒருவர், முட்டைக்காகவே பிறந்தது போல் ஒருவர், மேக்கப்பே உலகம் என்று வாழும் ஒருவர், கட்டிப்பிடிப்பதையே முழு தொழிலாக கொண்ட ஒருவர், ட்ரிகரிங் செய்வதற்கு ஒருவர், இங்கொன்றும் அங்கொன்றும் புறம் பேசும் ஒருவர் என்று ஒட்டுமொத்த நயவசஞ்க கூட்டமாக இருக்கும் பங்கேற்பாளர்களின் நிகழ்ச்சியை இனியும் பார்க்க வேண்டுமா? என்பதே அனைவரும் எண்ணமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com