உடலுறவு மூலம் பரவும் வைரஸ்… புற்றுநோயாக மாறும் கொடுமை? தவிர்ப்பது எப்படி!
Send us your feedback to audioarticles@vaarta.com
புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பதும் ஒன்று. இந்தப் புற்றுநோய் 99% உடலுறவின்போது வெளிப்படும் (Human Papilloma Viruses-HPV) எனும் வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுவதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Human Papilloma Viruses-HPV வைரஸ்களில் எல்லா வகை வைரஸ்களும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதில் 16,18,31,33,45,52,58 வகைகள் கருப்பை வாய்ப்பகுதியைப் பாதிக்கக்கூடியவை என்று மருத்துவ உலகம் குறிப்பிட்டு இருக்கிறது.
பொதுவாக உடலுறவின்போது வெளிப்படும் வைரஸ்கள் தானாகவே வெளியேறி விடும். ஆனால் சுகாதாரமற்ற சில சமயங்களில் இந்த வைரஸ் கருப்பை வாயில் தங்கி பெண்களுக்கு வீக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அடுத்து நாட்பட்ட அளவில் இது புற்றுநோயாகவும் மாறிவிடுகிறது.
பெண்களுக்கு மட்டுமல்ல, அரிதாக ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளில் மருக்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஆண்களுக்கு கழுத்து, தொண்டை பகுதிகளில் புற்றுநோயையும் இந்த வகை வைரஸ்கள் ஏற்படுத்தி விடுகின்றன.
உடலுறவு வைரஸ்களினால் ஏற்படும் புற்றுநோயை மிக எளிதாக தவிர்க்க முடியும். இதற்கு பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலோ போதுமானது. ஆனால் இதுகுறித்த எச்சரிக்கை உணர்வு நம்மிடம் இருப்பதில்லை.
மிகச் சிறிய வயிதில் (15-16) திருமணம் செய்து கொள்பவர்கள், எய்ட்ஸ், பிற பால்வினை நோய்களை கொண்டவர்கள், இத்தகைய நோய் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்பவர்கள், பல பேருடன் உடலுறவு கொள்பவர்கள், கருத்தடை மருந்துகளைத் தொடர்ந்து நீண்ட காலம் பயன்படுத்துபவர்கள், நேரடியாகவோ அல்லது பிறர் மூலமாகவோ புகையால் பாதிக்கப்படுபவர்கள் போன்ற நபர்களுக்கு இந்த வகை வைரஸ் புற்றுநோயை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கருப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 97 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 60 ஆயிரம் பெண்கள் உயிரிழந்து விட்டதாகவும் WHO கணித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படி பாதிக்கப்படுகின்ற பெண்களில் நான்கில் ஒரு இந்தியப் பெண் இறந்து போவதாகவும் உலகச் சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இதனால் பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய்க் குறித்த எச்சரிக்கையை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பருவம் அடைந்த ஒவ்வொரு பெண்ணும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். மேலும் பாலுறவு கொள்வதற்கு முன்பு இந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தத் தடுப்பூசியை ஆண்களும் செலுத்திக் கொள்ளலாம். காரணம் சுகாதாரமற்ற முறையில் பாலுறவு பழக்கம் கொண்டவர்களுக்கு Human Papilloma Viruses-HPV வகை வைரஸ் பெரிய எமனாக மாறிவிடுவதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
உடலுறவு வைரஸ் பாதிப்பை தடுக்க Quadrivalent vaccine Cervarix, bivalent Vaccine எனும் இருவகை தடுப்பூசிகள் இருக்கின்றன. இந்தத் தடுப்பூசிகளை 9- 26 வயதுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இளம் வயதிலேயே பாதுகாப்பு அடிப்படையில் செலுத்த வேண்டிய தடுப்பூசி என்பதால் பெற்றோர்கள் இதுகுறித்து அதிக அக்கறையோடு இருப்பது நலம்.
பெண்கள் ஒருவேளை திருமணத்திற்கு முன்பு இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருந்தாலோ அல்லது 30 வயதைக் கடந்து விட்டாலோ ஒவ்வொரு வருடமும் கருப்பை வாய்க்கான “பாப்“ பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com