விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை டாஸ்க்கில் தங்களது உண்மையான முகத்தை போட்டியாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே கமல்ஹாசன் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட அசீம் மீண்டும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருப்பதால் அவர் மீது இந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
அதேபோல் ஷெரினா தனது தலையில் காயம் பட்டது போல் நடிக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வார குறும்படம் அதற்கு விடை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடி வருபவர் விக்ரமன் என்பதே அனைவரது கணிப்பாக உள்ளது. குறிப்பாக ஏதாவது ஒரு போட்டியாளருக்கு அநீதி நேர்ந்தால் அதை தட்டிக்கேட்கும் முதல் நபராக விக்ரமன் இருக்கிறார் என்பதும் குறிப்பாக பெண் போட்டியாளர்களை மரியாதைக்குறைவாக நடந்து கொள்பவர்களை அச்சமின்றி தட்டிக்கேட்டு வருகிறார் என்பதையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்ரமன் நாளுக்குநாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவதால் அவரை கவிழ்ப்பதற்காக ஒரு குரூப் திட்டமிடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குரூப்பில் அசல் கோலார், மணிகண்டன், அசீம், ஏடிகே ஆகிய நால்வர் உள்ளனர். இவர்கள் பேசும்போது பெண்களுக்கு சப்போர்ட் செய்வதால் பிரபலம் அடைந்து விடலாம் என்று விக்ரமன் தப்புக்கணக்கு போடுகிறார் என்றும், நியாயம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் நாம் இருந்தால் நமக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் புகழ் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் விக்ரமை வீழ்த்த பல்வேறு திட்டங்களையும் தீட்டுகின்றனர். இந்தத் திட்டங்கள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Clowns for a reason. #Asal is the biggest clown of them all. #ADK the most toxic. #BiggBossTamil6 #BiggBosstamil pic.twitter.com/M9RFfttScV
— Singoolarity (@singoolarity) October 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments