விக்ரமனை வீழ்த்த நடத்தப்படும் சூழ்ச்சி ஆலோசனை. யார் யார் கலந்து கொண்டனர்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக போட்டியாளர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற பொம்மை டாஸ்க்கில் தங்களது உண்மையான முகத்தை போட்டியாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே கமல்ஹாசன் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்களால்  எச்சரிக்கை செய்யப்பட்ட அசீம் மீண்டும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருப்பதால் அவர் மீது இந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. 

அதேபோல் ஷெரினா தனது தலையில் காயம் பட்டது போல் நடிக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வார குறும்படம் அதற்கு விடை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடி வருபவர் விக்ரமன் என்பதே அனைவரது கணிப்பாக உள்ளது. குறிப்பாக ஏதாவது ஒரு போட்டியாளருக்கு அநீதி நேர்ந்தால் அதை தட்டிக்கேட்கும் முதல் நபராக விக்ரமன் இருக்கிறார் என்பதும் குறிப்பாக பெண் போட்டியாளர்களை மரியாதைக்குறைவாக நடந்து கொள்பவர்களை அச்சமின்றி தட்டிக்கேட்டு வருகிறார் என்பதையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விக்ரமன் நாளுக்குநாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவதால் அவரை கவிழ்ப்பதற்காக ஒரு குரூப் திட்டமிடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த குரூப்பில் அசல் கோலார், மணிகண்டன், அசீம், ஏடிகே ஆகிய நால்வர் உள்ளனர். இவர்கள் பேசும்போது பெண்களுக்கு சப்போர்ட் செய்வதால் பிரபலம் அடைந்து விடலாம் என்று விக்ரமன் தப்புக்கணக்கு போடுகிறார் என்றும், நியாயம் எந்தப் பக்கம் இருக்கிறதோ அந்தப் பக்கம் நாம் இருந்தால் நமக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் புகழ் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் விக்ரமை வீழ்த்த பல்வேறு திட்டங்களையும் தீட்டுகின்றனர். இந்தத் திட்டங்கள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

ரக்சிதாவை இந்த பார்வை பாக்குறாரே.. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசனத்துடன் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியான பாயிண்ட் எடுத்து பேசுவதிலும்

இந்த வார எலிமினேஷன் யார்? டேஞ்சர் ஜோனில் இந்த இருவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியாகி உள்ளது

'யசோதா' யாருன்னு தெரியுமில்ல.. அந்த கிருஷ்ண பரமாத்வையே பெத்தவ.. 'யசோதா' டிரைலர்

 நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' 100வது நாள்' செம பிளான் போட்டுள்ள கமல்ஹாசன்!

 உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல்

விஜய்யின் 'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின்