10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி? முதல்வர் அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,June 09 2020]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார்
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி என்பது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இதன்படி காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரச்ய் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது