முதலீட்டு சூட்சமத்தால் தொழில்துறை வளர்ச்சி… அதிரடி காட்டிய தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்திலும் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீடுகள் பன்மடங்காக அதிகரித்தது உள்ளது. இதற்கான சூட்சமம் என்ன என்பதைக் குறித்த அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தமிழகம் 2020 ஆம் ஆண்டில் அதிகளவு விருப்ப முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த விருப்ப முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 குழுக்களை நியமித்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தக் குழுக்களில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் மற்றும் பல அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். அதோடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் சண்முகமும் இந்தக் குழுவில் இணைந்து கொண்டு பல்வேறு வெளிநாட்டு குழுக்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் முக்கியப் பணியாக வெளிநாடுகளில் இருந்து இடம்பெறும் நிறுவனங்களைத் தமிழகத்தின் பக்கம் இழுப்பதாகவே இருந்தது. இதன்படி சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்வான பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீட்டை செய்தன.
அந்த வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் 80 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மேலும் அதன்மூலம் 66,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 121,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அதோடு இந்திய அளவில் தமிழகம் அதிக அளவில் முதலீடு ஈர்த்த மாநிலமாகவும் ஆகியது. அதோடு தமிழகத்தில் முதலீடு செய்ய வந்த தொழில் நிறுவனங்களிடம் தமிழக அரசு நட்புணர்வு பாராட்டியே வருகிறது.
இதனால் இந்திய அளவில் கடந்த வருடத்திற்கான முதல் 6 மாத இந்திய உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 16% ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சேலம்-கிருஷ்ணகிரி பகுதியில் அமெரிக்காவின் முக்கிய தொழில் நிறுவனமான மைலன் ஆய்வகம் அமைக்கப்பட்டது. அடுத்து ஒசூர் பகுதியில் புதிய இருசக்கர வாகனம் உருவாக்கும் ஆலை உருவாக்கப்பட்டது. இதனால் புதிய முதலீடுகள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டில் ஏஞ்சல் முதலீடு ஒப்பந்தம் தமிழகத்தில் 16 ஆக மட்டுமே இருந்தன. ஆனால் கொரோனா நேரத்திலும் தமிழக முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் இந்த ஆண்டு 22 ஏஞ்சல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. மேலும் டிசம்பர் மாதம் வரை 19,955 கோடி ரூபாய் முதலீட்டில் 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக முதல்வர் ஈர்த்துள்ளார். இதன் மூலம் 4,503 கோடி முதலீட்டில் 28,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி உற்பத்தியை விட தமிழக அரசு கொரோன நேரத்தில் 12.7% ஆக ஜிஎஸ்டி உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 5,97,573 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அளவை விட தமிழக அரசு 2020 ஆம் ஆண்டில் அதிக முதலீடுகளை ஈர்த்து இருப்பதோடு பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments