இன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று உலக அளவில் சாம்பியன் பட்டம் பெற்று உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவருக்கு முதல் முதலில் ஸ்பான்சர் செய்தது எஸ்பிபி அவர்கள்தான் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது
செஸ் விளையாட்டில் உலக புகழ்பெற்று, பல சாம்பியன் பட்டங்களை பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆனால் அவர் 14 வயதில் தேசிய செஸ் போட்டியில் விளையாட இருந்தபோது அவருக்கு முதன்முதலில் ஸ்பான்சர் செய்தது எஸ்பிபிதான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவலை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
தான் 14 வயதாக இருக்கும்போது ’மெட்ராஸ் கோல்ட்’ என்ற செஸ் அணியில் இருந்ததாகவும், அந்த அணி கடந்த 1983 ஆம் ஆண்டு தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்தபோது தங்கள் அணிக்கு ஸ்பான்சர் செய்தது எஸ்பிபி அவர்கள் தான்’ என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்
மேலும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் எஸ்பிபி அவர்களின் தீவிர ரசிகை என்றும், அவர்கள் சமையல் செய்யும் போது கேட்கும் பாடல்கள் அனைத்துமே ஸ்பிபி பாடல்கள் தான் என்றும் குறிப்பாக ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் இடம்பெற்ற ’கம்பன் ஏமாந்தான்’ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் விஸ்வநாதன் ஆனந்தின் மனைவி அருணா அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார்
மேலும் சுகாசினி மணிரத்தினம் அவர்கள் எடுத்த பேட்டி ஒன்றில் ’செஸ் என்றால் ஆனந்த், ஆனந்த் என்றால் செஸ் என்றும் செஸ் மற்றும் ஆனந்த் என்றால் இந்தியா’ என்றும் பாடகர் எஸ்பிபி அவர்கள் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments