ஊரேகூடி நிச்சயித்த திருமணத்தை தைரியமாகத் தடுத்து நிறுத்திய 13 வயது சிறுமி… பரபரப்பு சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கால் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் சட்ட விதிமுறைகளை மீறி நடக்கும் திருமணங்களும் அதிகரித்துக் கொண்டே வருவதாகச் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு அவளுக்கே தெரியாமல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. 3 குழந்தைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்தில் தந்தை ஒருவர் மட்டுமே வருமானத்தைக் கொண்டவராக இருக்கிறார். எனவே இதுதான் நல்ல சமயம் என பெற்றோர்கள், ஊரார்கள் எல்லாம் ஒன்றுகூடி 13 வயது சிறுமி பிரீத்திக்கு திருமணத்தை நிச்சயித்து இருக்கின்றனர்.
இந்நிலையில் திருமண தேதியை குறிப்பதற்காக மணமகன் வீட்டில் இருந்து சிலர் வந்தபோது இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பிரீத்தி துளியும் யோசிக்காமல் அண்ணனுடைய தொலைபேசியில் இருந்து அவளது ஆசிரியரை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதனால் பிரீத்தியின் வகுப்பு ஆசிரியரான மது சர்மா உடனே அவளது பெற்றோர்களை நேரில் சந்தித்து இது தவறு எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பிரீத்தி ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு சமத்தாக படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல பிரீத்தியின் பக்கத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ரிங்கிக்கும் நடைபெற்று இருக்கிறது. பிரீத்தி விஷயத்தை கேள்விப்பட்ட ரிங்கி அவளும் தன்னுடைய ஆசிரியருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் ஆசிரியர் காவல் துறை மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரின் உதவியோடு சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகக் தகவல் கூறப்படுகிறது.
இச்சம்பவங்களைப் போலவே மற்றொரு 15 வயது சிறுமி பிரியான்ஷிக்கும் நடந்திருக்கிறது. இந்த விவகாரங்களில் பர்தாதா இண்டர் கல்லூரிக்குத்தான் பலரும் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர். காரணம் இந்தப் பள்ளி குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூகத்தின் நடைமுறைகளையும் பெண் பிள்ளைகள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் தீவிரமாக சொல்லிக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments