CAA சட்டத்திற்கான விவாதத்தில் தெலுங்கானா முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?!
Send us your feedback to audioarticles@vaarta.com
CAA, NRC போன்ற சட்டங்கள் மக்களை பிளவுபடுத்துவதாக உள்ளது என இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் நேற்று இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
CAA போராட்டத்திற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் இன்னும் பெண்கள் தலைமையில் டெல்லி, சென்னை, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடந்து கொடுத்தான் இருக்கின்றன.கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்களது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சி.ஏ.ஏ, என்.பி.ஆர் குறித்து விவாதக் கூட்டம் நேற்று தெலுங்கானாவில் நடைபெற்றது. இதில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது நான் என் பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழுக்கு எங்கே போவேன்..?! அவர்கள் இந்த நாடு என எப்படி நிரூபிப்பேன்? நான் பிறந்த போது மருத்துவமனைகள் கிடையாது. பிறந்த தேதியி ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டார்கள். இப்படி இருக்கும் போது ஏழைகள், பழங்குடிகள் எங்கு செல்வார்கள். நிரூபிக்க என்ன பாடுபடுவார்கள்..?!
இது போன்ற சட்டங்கள் எரிச்சலை வரவைக்கின்றன. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைகிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக நாம் மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments