'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Monday,January 17 2022]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடிகை சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார் என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட ஒரு சில மொழிகளில் இந்த படம் ஹிட்டாக இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த பாடலுக்கு அவர் ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகிஉள்ளது. 3 நிமிடங்கள் மட்டுமே படத்தில் ஓடும் இந்த பாடலுக்கு நடனமாட முதலில் சமந்தா மறுத்ததாகவும், அதன் பின்னர் அல்லு அர்ஜுன் அவரை சமாதானப்படுத்தியதோடு, ரூ.5 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும், அதன் பின்னரே சமந்தா இந்த பாடலுக்கு நடனமாட சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிரத்யேக ஓடிடி சேனல் ஆரம்பம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது என்பதும் இதில் டைட்டில் வின்னர் ஆக ராஜூ தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார் என்பதும் தெரிந்ததே

டைட்டில் வின் செய்தவுடன் ராஜூ போட்ட ஒரே ஒரு வார்த்தை டுவிட்!

பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி டைட்டில் பட்டத்தை பெற்றவுடன் ஒரே ஒரு வார்த்தையில் போட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது

மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா 3 ஆவது அலை பாதிப்பு இந்தியாவில் கடும் பதற்றத்தை

'விஸ்வரூபம்' படத்திற்காக தேசியவிருது பெற்ற நடனக்கலைஞர் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

 'விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற 'உன்னை காணாத' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகராஜ் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 83. 

கேப்டன் பதவியைத் துறந்த கோலி குறித்து மனைவி அனுஷ்கா ஷர்மா நெகிழ்ச்சி கடிதம்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான கேப்டனாக வலம்வந்த விராட் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்