வெறும் 3 வார்த்தைக்கு 400 கோடி சம்பளமா? பிரபல நடிகர் குறித்த ஆச்சர்யத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா என்பதே ஒரு கற்பனைச் சித்திரம்தான். இப்படி இருக்கும்போது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹாலிவுட் சினிமாவிற்காக ஒரு முன்னணி நடிகர் வெறும் 3 வார்த்தைகளைப் பேசிவிட்டு அதுவும் நடிக்காமல் 400 கோடிகளைத் தாண்டி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். உண்மையில் அப்படியொரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கற்பனை கலந்து ரசிகர்களுக்கு மாயாஜாலத்தை காட்டிவிடும் ஹாலிவுட் சினிமா வரிசையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “Guardian of the Galaxy”. இந்தத் திரைப்படத்தில் Thor, Rocket போன்ற கதாபாத்திரங்கள் முதன்மையான இடத்தைப் பிடித்தது. கூடவே The tree man என்ற கற்பனைப் பாத்திரமும் இதில் இடம்பெற்றிருந்தது.
மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட இந்தக் கற்பனைப் பாத்திரம் படம் முழுக்கவே வெறும் 3 வார்த்தைகளை மட்டுமே திரும்ப திரும்ப பேசியிருக்கும். ஆனால் இதற்கு பின்னணி பேசிய பிரபல ஹாலிவுட் நடிகர் Vin Diesel க்கு மார்வெல் மற்றும் டிஸ்னி ஃபோர்க் நிறுவனம் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாகக் கொடுத்துள்ளது. இது இந்திய மதிப்பில் 400 கோடிகளைத் தாண்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Guardian of the Galaxy திரைப்படத்தில் இடம்பெற்ற The tree man கதாபாத்திரம் ரசிகர்களுக்கு தீனிபோடும் விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கதாபாத்திரம் அதிகம் பேசாமல் I am Groot எனும் 3 வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான உணர்வுகளோடு சொல்லும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த The tree man கதாபாத்திரத்திற்கு Fast and Furious வரிசை திரைப்படங்களில் நடித்து உலகப்புகழ்பெற்ற நடிகர் Vin Diesel குரல் கொடுத்திருந்தார். இதற்கான மார்வெல் மற்றும் டிஸ்னி ஃபோர்ட் நிறுவனம் 54 மில்லியன் டாலர்களை சம்பளமாகக் கொடுத்துள்ளது. இதுகுறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments