மெர்சல்' படத்தின் கதை கசிந்தது எப்படி?
- IndiaGlitz, [Monday,October 16 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே ஒரு வதந்தி இணையதளங்களில் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் கதைச்சுருக்கம் என்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே வெளியிட்டது போல் ஒரு செய்தி இணையதளங்களில் உலாவி வருகிறது.
அந்த கதைச்சுருக்கம் இதோ: மேஜிசியன் வெற்றி தன் அண்ணன் டாக்டர் மாறனின் பேரை கொண்டு மருத்துவத்துறையில் உள்ள சிலரை கடத்தி கொலை செய்கிறான். வெற்றியை மாறனாக நிஅனித்து கைது செய்யும் போலீஸ் அதிகாரி ரத்னவே, வெற்றியிடம் கொலைகளுக்கான காரணத்தை கேட்கிறார். வெற்றி தன் தந்தை வெற்றிமாறனுக்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கூறுகிறான். வெற்றிமாறான் தளபதியாக தன் சொந்த ஊரில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். ஏழை மக்களுக்காக மருத்துவமனை கட்டி கொடுத்து, அதில் இலவச மருத்துவம் செய்ய டேனியலை நியமிக்கிறார்.
வெற்றிமாறனின் இரண்டாவது குழந்தையின் பிரசவத்தில் பணத்திற்காக தவறான முறையில் சிகிச்சை அளிக்க, வெற்றிமாறனின் மனைவி இறக்கிறாள். இதை அறிந்து கொண்டு கேட்கும் வெற்றிமாறானை டேனியல் அடித்து கொல்கிறான். சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தலையில் அடிபட்டு சிறுவயது ஞாபகங்கள் மறக்கிறது. பின்னர் மாறனுக்கு வெற்றி மூலம் உண்மைகள் தெரிய வருகிறது. இருவரும் இணைந்து டேனியலை கொல்கின்றனர். இறுதியில் வெற்றி சிறைக்கு செல்கிறான், மாறன் இந்திய மருத்துவ கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறான்.
இணையத்தில் வலம் வரும் இந்த கதைதான் படத்தின் கதையா? என்பதை என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும். அதுவரை பொறுமை காப்போம்