'பீஸ்ட்' தாக்கம் எதிரொலி: 'கே.ஜி.எப் 2' படத்திற்கு இவ்வளவு தியேட்டர்கள் தானா?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்துள்ள ‘கே.ஜி.எப் 2’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் 'பீஸ்ட்’ படம் வெளியாகும் காரணத்தினால் கே.ஜி.எப் 2’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சுமார் 1000க்கும் அதிகமான திரையரங்குகள் இருக்கும் நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் 'பீஸ்ட்’ திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 'பீஸ்ட்’ ரிலீஸ் காரணமாக ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ள ‘கே.ஜி.எப் 2’ படத்திற்கு 200 முதல் 250 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியானது என்பதும் ஆனால் அந்த படம் சோலோவாக வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.