அஜித்தின் 'விவேகம்' படத்தில் எத்தனை பாடல்கள்: அனிருத் தகவல்

  • IndiaGlitz, [Monday,June 19 2017]

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'சர்வைவா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மொத்தம் எத்தனை பாடல் என்பதை ஐடியூன் லிங்க் மூலம் அனிருத் உறுதி செய்துள்ளார்.
ஐடியூன் இணையதளத்தில் மொத்தம் 7 பாடல்கள் குறிக்கப்பட்டு முதல் பாடலை மட்டும் சர்வைவா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதி ஆறு பாடல்களின் இடங்கள் வெற்றிடமாக உள்ளது. எனவே இந்த படத்திற்காக ஏழு பாடல்களை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் மற்ற பாடல்கள் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.