தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மீனாட்சி அம்மன் கோவில்: தமிழனின் கெத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் தாஜ்மஹால் மற்றும் உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அமைச்சர் உமாபாரதியிடம் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் மதுரை மாநகர கமிஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் பெற்று கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதிலும் இருந்து பத்து கோவில்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது இந்த விருதும், பெருமையும் கிடைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் ரூ.11.65 கோடி செலவில் நவீன மின்னணு கழிப்பறை, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரட்டை குப்பைத் தொட்டிகள், அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து அந்த இடத்திலேயே இயற்கை உரம் தயாரித்தல், குப்பைகளை சேகரிக்க வாகன வசதி, குப்பைகளை சாலைகளில் போடுவதை தடுக்க தூய்மை காவலர்கள் மூலம் கண்காணிப்பு 24 மணி நேர துப்புரவு பணி, கோவிலை சுற்றி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை, நவீன மண்கூட்டும் எந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டதால் இந்த விருது தற்போது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments