கொரோனா பரிசோதனையில் தெர்மல் ஸ்கேன் எப்படி பயன்படுகிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் முதலில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப் படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் மட்டுமல்லாது, இதுவரை தோன்றிய அனைத்து வைரஸ் கிருமிகளின்போதும் உடல் வெப்ப நிலையை சோதனை செய்ய அகச்சிவப்பு தெர்மா மீட்டர் கருவியே பயன்படுத்தப் பட்டது.
பொதுவாக மருத்துவமனைகளில் உடல் வெப்பநிலையை சோதிப்பதற்காக தெர்மோ மீட்டர் அல்லது வெப்பநிலை மானியை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். வாய் அல்லத கை அக்குள் போன்ற இடங்களில் இந்தக் கருவியை வைத்து வெப்பநிலை அளக்கப்படுகிறது. தெர்மோ மீட்டரில் இருக்கும் பாதரசம் உயர்கிற அளவை பொறுத்து உடல் வெப்ப நிலையும் கணிக்கப்படுகிறது. இப்படி மனிதர்களின் அருகில் செல்லாமலே ஒருவரின் உடல் வெப்பநிலையைத் தெரிந்து கொள்வதற்கு தெர்மல் ஸ்கேன் உதவுகிறது.
தெர்மல் ஸ்கேனை வைத்து குறைந்தது ஒரு அடி தூரம் தள்ளிநின்று கூட ஒருவரின் உடல் வெப்ப நிலையை கச்சிதமாக அளக்க முடியும். இந்த கருவியில் அகச்சிவப்பு கதிர் அடங்கியிருக்கும். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து இந்தக் கருவியை அழுத்தினால் மனித உடலிலிருந்து வெளிப்படும் வெப்ப கதிர்வீச்சின் அளவுக்கு ஏற்ப இந்த கருவி உடல் வெப்பநிலையின் அளவினை கணித்துக் கொடுக்கிறது. மருத்துவமனைகளில் இதன்பயன்பாடு குறைவு என்றாலும் குழந்தைகளுக்கு இந்தக் கருவியைக் கொண்டே வெப்பநிலையை கணிக்கிறார்கள். மேலும், 100 விழுக்காடு துல்லியமான முடிவினை இந்தக் கருவி கொண்டிருக்கும் எனவும் மருத்துவ உலகம் நம்புகிறது.
மனிதர்களின் சராசரி உடல் வெப்ப நிலை 98.4 டிகிரி ஃபாரன் ஹீட்டாக உள்ளது. இந்த அளவு அதிகரித்து 100 க்கும் மேல் செல்லும்போது அந்த நபருக்கு காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. இந்த முதல் சோதனையில் உடல் வெப்பநிலை கணிக்கப்பட்ட பின்னரே, அடுத்து என்ன வகையான காய்ச்சல் என்பதையும் மருத்துவர்கள் பிரித்து பார்க்கின்றனர். கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தெர்மல் ஸ்கேன் மிகவும் பாதுகாப்பான கருவியாக மருத்துவ உலகம் பயன்படுத்தி வருகிறது. காரணம் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் சளி, திரவத்தின் மூலம் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மற்றவர்களிடம் இருந்து தள்ளி நின்று உடல் வெப்பநிலையை சரிப்பார்க்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com