அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படியிருக்கிறது??? நிலவரம் குறித்த ஒரு தொகுப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,April 30 2020]

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% அளவிற்கு சரிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான பொருளாதார நிலைமையை அந்நாட்டு வர்த்தகத் துறை வெளியிட்டு இருக்கிறது. 2008 ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்க கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவின் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. 26 மில்லியன் மக்கள் வேலையின்மை காரணமாக நிவாரணத் தொகை கேட்டு அரசிடம் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

அமெரிக்காவில் தற்போது வரை வேலை வாய்ப்பை இழந்தோரின் எண்ணிக்கை 4.4% ஆக அதிகரித்து இருக்கிறது. அடுத்த மாதத்தில் மேலும் 15% அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகையின் மூத்த பொருளாதார ஆலோசகர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த காலாண்டைவிட அடுத்த காலாண்டில் மேலும் 30% சரியும் எனக் குறிப்பிடுகிறார். சென்ற ஆண்டு அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டதால் இந்நிலைமையை அமெரிக்கா சந்தித்தாகக் கூறப்படுகிறது. PNC யின் தலைமை பொருளாதார நிபுணர் குஸ் ஃபவுச்சரும், அமெரிக்க கடும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது மேலும் 30% சரியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து குஸ் ஃபவுச்சர் வரலாற்றில் மிக மோசமான காலாண்டில் இருக்கிறோம் எனக் கூறுகிறார். கொரோனா முடிந்தவுடன் இந்நிலைமை சரிசெய்யப்படும் எனவும் அவர் எதிர்ப்பார்க்கிறார்.

இதற்கு முன்னர் அமெரிக்க பொருளாதாரம் 1932 ஆம் ஆண்டில் 13% சரிவை சந்தித்தது. தற்போது பொருளாதாரத்தின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளதால் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. மார்ச் 16 முதல் சிறு வணிகங்கள் முதற்கொண்டு அனைத்தும் மூடப்பட்டாலும் அதற்கான வாடகையை வணிகர்கள் செலுத்தி வருகிறார்கள். எனவே கொரோனா நேரத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அனைத்து சிறு கடைகளிலும் பாதிப்பை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அடுத்தக் கட்டம் எப்படியிருக்கும் எனப் பல வணிகர்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இந்நிலைமை இதேபோல நீடிக்காது என்ற நம்பிக்கையையும் வணிகர்கள் கொண்டிருக்கின்றனர்.

More News

மும்பை மக்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிகமாக நிறுத்தம்!!! காரணம் என்ன???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்துவருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவினர்களுடன் முக்கிய ஆலோசனை செய்யும் முதல்வர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

'சந்திரமுகி 2': வேட்டையன் மன்னன் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

துல்கர் சல்மான் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் தமிழ் நடிகர்?

சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் பிரபாகரன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக பிரச்சனை எழும்பியதால்,

திரையரங்குகள் மூடியே இருக்கட்டும்: பிரபல இயக்குனரின் நீண்ட கட்டுரை

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான், இந்த கொரோனா காலத்தில் திரையுலகின் நிலைமையும், திரையரங்குகள் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பது குறித்தும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரை இதுதான்: