அதுக்குள்ள எப்படி? அட்லியின் ஆச்சரியத்திற்கு காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று இரவு வெளிநாட்டிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு இன்னும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால் படக்குழுவினர்களும் ரசிகர்களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் இன்று இரவுக்குள் அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிகில் படத்தை பார்த்து விட்டதாக ஒருசிலர் குறிப்பிட்டு படத்தின் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இது ரசிகர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இன்று இரவு தான் வெளிநாட்டிலேயே முதல் காட்சியை திரையிடவுள்ள நிலையில் அதற்குள் எப்படி விமர்சனம் வந்தது என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் அட்லி விளக்கம் அளித்துள்ளார்.
பிகில் படத்தின் ஒரிஜினல் காப்பி இன்று காலைதான் கொடுத்திருக்கின்றோம். கேடிஎம் நாளை அதிகாலை தான் ரிலீஸ் செய்யப்படும். அதற்குள் எப்படி பார்த்திருக்க முடியும்? என்று அவர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து பிகில் படத்தை பார்த்ததாக விமர்சனம் செய்தவர்கள் போலி என்பது உறுதியாகிறது.
Copy eh inniki kalaile dhan kuduthirukom. KDM will be released tomorrow early morning only adhukulle epdi pathiruka mudiyum? Idhukellam I.N. (ignore negativity) dhan! #AskAtlee https://t.co/No06nZywDE
— atlee (@Atlee_dir) October 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com