தடுப்பூசி போட்டும் கொரோனா வருதே? அப்போ தடுப்பூசி அவசியமா? பளீர் பதில்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவா வருமுன் காப்போம் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசிகள் போடப்படுகிறது. மருத்துவ உலகம் மிகவும் நம்புகிற இந்தத் தடுப்பூசிகள் கொரோனா இரண்டாவது அலை விஷயத்தில் வெறும் 50% அளவிற்கு மட்டுமே பலனைக் கொடுப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாவர்கள் கூட தற்போது கொரோனா பாதிப்பினால் உயிரிழந்து வருகின்றனர். இதுபோன்ற சமயத்தில் சிலர் தடுப்பூசி மீது இருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
தடுப்பூசி- இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்குத் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து செலுத்தி வருகிறோம். ஒருவேளை இந்தச் சொட்டு மருந்தை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும்? தற்போது குறைந்து போய் இருக்கிற போலியோ பாதிப்பு கண்டிப்பாக எகிறச்செய்யும்.
காரணம் உலகம் முழுக்க போலியோ பாதிப்பு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் தடுப்பூசி என்பது வந்துவிட்ட நோய்க்கு எதிராகவும் வரப்போகிற நோய்க்கு எதிராகவும் செலுத்தப்படுகிறது. இந்தத் தடுப்பூசி நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அந்த நோயைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அதற்கு எதிராகத் தயார் படுத்துகிறது.
கொரோனா தடுப்பூசி- கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில் தடுப்பூசி என்பது 100% செயல்திறனைக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு நமக்கு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் கக்குவான் இருமல் போன்ற பழைய நோய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி கூட 80-95% மட்டுமே பலனைத் தரும் என மருத்துவ உலகம் குறிப்பிட்டு காட்டுகிறது. மீதம் இருக்கும் 5-15% மக்களுக்கு இந்தத் தடுப்பூசி வேலைச் செய்யாமல் போவதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படித்தான் கொரோனா விஷயத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்கிற எல்லோருக்கும் பலனைக் கொடுக்காது என்ற உண்மையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் கொரோனா மரபணு தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்த அடிப்படையிலும் கொரோனா தடுப்பூசியை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டும் உயிரிழப்பு- தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து போகிற கதையைப் பார்க்கும்போது உண்மையில் பதறத்தான் செய்கிறது. இதுபோன்ற விஷயங்கள் ஆயிரத்திற்கும் 1 என்ற அளவில் இருந்தாலும் இது மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு எவ்வளவு பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள், அதில் எத்தனை சதவீதம் இப்படி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது போன்ற கணக்கெடுப்புகளை நடத்திப் பார்த்தால் உயிரிழப்பு வெறும் 1%க்கும் கீழ் குறைவாகவே இருக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவுப்படுத்துகின்றனர்.
இதுதவிர அந்தக் காலத்தில் எல்லாம் எந்த நோயும் இல்லை, நான் சுத்தமாகத்தானே இருக்கிறேன் எனக்கு எதற்கு தடுப்பூசி என்ற மடத்தனமான கேள்விகளையும் சிலர் முன்வைக்கின்றனர். கொரோனா நேரம் என்பதற்காக அல்ல, உண்மையிலேயே இதுபோன்ற கேள்விகளில் எந்த அறிவியலும் இல்லை என மருத்துவர்கள் கடிந்து கொள்கின்றனர்.
மனிதனைச் சுற்றி பல ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் பாதிப்புகளை ஏற்படுத்த எப்போதும் தயாராக இருக்கின்றன. அதுவும் கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் யாரிடம் நோய்த்தொற்று இருக்கிறது, அது எப்படி பரவுகிறது என்றுகூட தெரியாத நிலையில் தடுப்பூசி என்பதை அவ்வளவு எளிதாக மறுத்துவிட முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தடுப்பூ செலுத்திக் கொள்வோம். வருமுன் காப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com