உலகச்சுகாதார அமைப்பு எப்படி செயல்படுகிறது??? கொரோனாவில் இதன் பங்கு!!!

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

 

கொரோனா நோய்த்தொற்றுப் பற்றிய விவரங்களை சீனா பொதுவெளியில் மறைத்துவிட்டதாகவும் அதனால் ஏற்பட்ட தாமதத்தினால் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டிவருகிறார். மேலும், சீனாவின் இத்தகைய போக்குக்கு உலகச் சுகாதார அமைப்பும் ஆதரவு காட்டிவருகிறது. நெருக்கடியான நேரத்தில் உலகச் சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவது உலக நன்மையைப் பாதிக்கும் எனவும் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டு பேசினார். கடந்த வாரத்தில் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார். “WHO வுக்கு நிதியை வழங்க வேண்டாம்” என்று நேற்று தன்னுடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் சூழலில் அதிபர் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது வருத்தத்தை அளிப்பதாக சீனாவின் வெளியுறவு செயலாளர் ஸாவே லிஜியன் குறிப்பிட்டுள்ளார். உலகச் சுகாதார அமைப்பு நெருக்கடியான சூழலில் பணியாற்றி வருகிறது. இத்தகைய நிலைமையில் நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவது நல்லதல்ல, இதனால் பல வளரும் நாடுகள் பாதிக்கப்படுவதோடு அமெரிக்காவும் பாதிக்கப்படும் எனவும் சீனாவின் வெளியுறவு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இப்படி நெருக்கடி காட்டிவருவது தேவையில்லாத வேலை என்று இன்னொரு பக்கம் விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே WHO வுக்கு அதிகளவிலான நிதியை அளித்துவரும் அமெரிக்கா இந்த முடிவை எடுக்கும்போது அமைப்பின் செயல்பாடுகள் முடங்கும் என தற்போது உலகம் முழுக்க அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச பொது சுகாதாரத்திற்கு பொறுப்பு வகிப்பதை நோக்கமாகக் கொண்டு , ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக உலகச் சுகாதார அமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் 150 கிளை அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகச் சுகாதார நிறுவனம் ஏப்ரல் 7, 1948 இல் முதன்முறையாக நிறுவப்பட்டது. உலகளாவிய சுகாதாரத்திற்கு பாதுகாப்பு அளிப்பது, பொது சுகாதார அபாயங்களைக் கண்காணித்தல், சுகாதார அவசரநிலைகளுக்கான பதில்களை ஒருங்கிணைத்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்றவை இதன் அடிப்படை பணிகளாகும். முதலில் 26 நாடுகள் மட்டுமே இதன் அங்கமாக விளங்கிய நிலையில் தற்போது 194 நாடுகள் உறுப்புநாடுகளாக இருந்துவருகின்றன. சர்வதேச அளவில் பெரும்தொற்றுகள் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் அனைத்து நாடுகளுக்கும் WHO பாலாமாக இருந்து ஒருங்கிணைந்த பணியை ஆற்றிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

WHO வின் நிதியானது அதன் உறுப்பு நாடுகள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. 2018 இன் நிலவரப்படி 4.2 மில்லியன் நிதியை WHO தன் இருப்பாக வைத்திருந்தது. பெருந்தொற்று நேரங்களில் பல தன்னார்வலர்கள் அளிக்கும் நன்கொடையை அடிப்படையாக வைத்து நோய்க்குறித்த ஆய்வுகள், விழிப்புணர்வு போன்ற பணிகளை இந்தஅமைப்பு செய்துவருகிறது. 2019 ஆம் ஆண்டின் நிலவரப்படி அமெரிக்கா அதிக அளவிலான நிதியை WHO க்கு வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

553.1 மில்லியன் அளவிலான டாலர்களை வழங்குவதன் மூலம் மொத்த நிதியில் அமெரிக்காவின் பங்கு 14.76% ஆக இருந்துவருகிறது. அடுத்ததாக உலகின் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் நிறுவனம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக 367.7 மில்லயன் டாலர் நன்கொடையாக வழங்கப்படுகிறது. WHO நிதி விகிதத்தில் இது 9.67% ஆகும். அடுத்ததாக மூன்றாவது பெரிய பங்களிப்பை GAVI தடுப்பூசி நிறுவனம் வழங்கிவருகிறது.

இவர்களைத் தவிர இங்கிலாந்து 7.79% பங்களிப்பையும் ஜெர்மனி 5.68% பங்களிப்பையும் கொடுத்து வருகின்றன. இதில் இந்தியாவின் பங்களிப்பு 0.48% ஆகவும் சீனாவின் பங்களிப்பு 0.21% பங்களிப்பாகவும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளுக்கிடையே வர்த்தகம், பொருளாதாரம் போன்ற முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில் சர்வதேச சுகாதார பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் கடந்த கால பணிகள் அளிவிட முடியாத பங்களிப்பை கொடுத்திருக்கின்றன. எபோலா, சார்ஸ், மெர்ஸ், பிளேக், போலியோ போன்ற நிலைப்பாடுகளில் இந்த பணிகள் உலகம் முழுவதும் பல கோடி மக்களை காப்பாற்றுவதற்கான உறுதிப்பாட்டை அளித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா பாதிப்பு நேரத்தில் நோய் கண்டுபிடிப்பு, விழிப்புணர்வு, நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு போன்ற முக்கியமான பணியை உலகச் சுகாதார அமைப்பு ஆற்றிவருகிறது. உலக நாடுகளுக்கிடையில் அத்யாவசியமான பாதுகாப்பையும் விழிப்புணர்வையும் பொதுப்படையாக ஏற்படுத்திவரும் ஒரு அமைப்பு என்பது தேவையான ஒரு அம்சமாகும்.

More News

இந்த விடுமுறையில் பிரபல நடிகைகள் அனைவரும் பார்த்த ஒரே படம் இதுதான்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் வீட்டில் சும்மா உள்ளனர்.

இந்தியாவில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி

எல்லாரும் என்னையே டார்கெட் பண்றாங்க: விஜே மணிமேகலை புலம்பல்

கொரோனா வைரஸ் விடுமுறை ஆரம்பித்ததிலிருந்தே திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் நகைச்சுவையான

யூடியூப் பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி: கொரோனாவால் வேலை இழந்தத வாலிபரால் பரபரப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மேலும் 19 நாட்களுக்கு இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

காடுகளை அழித்தோம், வாழ்க்கையை தொலைத்தோம்: வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் அதன் தாக்கம் கடந்த சில வாரங்களாக உள்ளது. இதனை அடுத்து இந்தியாவில்