பயிற்சி மையம் பக்கமே போகல… நீட் தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மாணவியின் புதிய அனுபவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள் மாதக்கணக்கான பயிற்சி மையத்தில் செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவி பயிற்சி மையத்திற்கு போகமலே 666 மதிப்பெண் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் அவர் நீட் நுழைவுத்தேர்வில் பயிற்சி மையத்திற்கு போகாமலே எப்படி வெற்றி பெறலாம் என்பது குறித்த தனது அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மதுரையை அடுத்த ஆனையூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் பாண்டிராஜாவின் மகள் உய்யஸ்ரீநிலா. இவர் நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 666 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மேலும் இவர் பயிற்சி மையத்திற்கு போகாமல் தனாகவே படித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மாணவி உய்யஸ்ரீநிலா நீட் தேர்வில் வெற்றிப் பெறுவதற்காக என்னை பயிற்சி மையத்திற்கு செல்லுமாறு என்னுடைய குடும்பத்தினர் யாரும் வற்புறுத்தவில்லை.
மேலும் இத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமானால் 9,10,11,12 ஆம் வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை முழுமையாகப் படித்தால் போதுமானது. நீட் தேர்வில் குழப்பம் இல்லாமல் எளிமையாக வெற்றிபெற வேண்டுமானால் இந்தப் பாடங்களை மாணவர்கள் திரும்ப திரும்ப படிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். இதைத்தவிர சில இணையதள பக்கங்களிலும் நீட் தேர்வு குறித்த குறிப்புகளை நான் எடுத்துக் கொண்டேன். இந்த முறையைப் பின்பற்றினால் எளிமையாக தேர்ச்சி பெறலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மீண்டும் அடுத்த வருடம் எழுதி தேர்ச்சிப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த மாணவி மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments