உலகின் பெரிய பணக்காரர் இவர்தான்… யார் இந்த எலான் மஸ்க்???
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் செயல் அதிகாரி எலான் மஸ்க் தான் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர் என அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு போப்ஸ் வெளியிட்டு இருந்த கணிப்பின்படி அமேசான் நிறுவனத்தின் சொந்தக்காரர் ஜெஃப் பெசாஸ் உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்தார். இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இருந்தது.
தற்போது ஜெஃப் பெசாஸை பின்னுக்குத்தள்ளி எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. காரணம் இவரின் எலக்ட்ரிக் கார்களின் பங்குகள் தற்போது அதிகரித்து உள்ளதால் இவரது சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது என CNBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடி வந்த நிலையில் எலான் மஸ்க்கின் Space X நிறுவனம், நிலவுக்கு விலை மலிவான விண்கலத்தை அனுப்பி அதில் வெற்றி கண்டது. அதேபோல செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியிலும் இந்நிறுவனம் வெற்றிக் கண்டுள்ளது. உலகின் மிக மலிவான விண்கலங்களை உருவாக்கி அதை மீண்டும் பயன்படுத்தும் வகையில் Space X நிறுவனம் தற்போது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதேபோல இவரின் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் இத்தனை பெரிய இடத்திற்கு உயர்ந்த எலான் மஸ்க் யார் என்ற கேள்வியை தற்போது ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. காரணம் ஒருவேளை இவர் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்த வந்திருக்கலாம் எனப் பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இவரின் வாழ்க்கை முறையே மிக எளிமையில் இருந்து தான் தொடங்குகிறது. ஆனால் இவரின் கனவுகளும், முயற்சிகளும் படு வித்தியாசமாக இருந்து இருக்கின்றன. அதில் ஒன்றுதான், வணிக நோக்கில் விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டும். செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற வேண்டும் என்பது. இந்தக் கனவுத்திட்டத்தை நோக்கமாக கொண்டே எலான் மஸ்க் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். பார்ப்பதற்கு என்னவோ இவரது கனவுத் திட்டம் கிண்டலாகத் தோன்றலாம். ஆனால் இதில் படிபடியான வெற்றியை இவர் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு பொறியாளர். தாயார் சத்துணவு நிபுணர். தன்னுடைய 12 ஆம் வயதிலேயே தன்னுடைய விளையாட்டு செயலிகளுக்கு தானே குறியீடுகள் எழுதி இருக்கிறார். அதை நல்ல விலைக்கு விற்றும் சாபாதித்து இருக்கிறார். இதனால் புத்திசாலியாகவும் தன்னை வளர்த்து கொண்டு இருக்கிறார். அடுத்து தன்னுடைய இளம் வயதில் கனடாவின் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய படிப்பை தொடங்கிய இவர் 2 வருடங்கள் கழித்து பென்சில்வேனியாவிற்கு இடம் பெயருகிறார். அங்கு பொருளாதாரம் மற்றும் இயற்பியல் எனும் இரண்டு துறைகளிலும் பட்டம் பெறுகிறார். அதோடு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் பிஹெச்டி படிக்க விண்ணப்பிக்கிறார். ஆனால் இரண்டே நாட்களில் தன்னுடைய படிப்பை நிறுத்துகிறார்.
காரணம் படிப்பை விட வணிகம் அவரை பெரிதும் ஈர்க்கிறது. அப்படி தான் கடந்த 1999 ஆண்டு சொந்த நிதி நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். ஆனால் நினைத்ததை விடவும் அதில் படுதோல்வியை சந்திக்கிறார். அடுத்து ஜிப் 2 எனும் தொழில் நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதிலும் பெரும் நட்டம். அனைத்துப் பங்குகளையும் விற்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். இவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தே வந்தாலும் தன்னுடைய முயற்சியை மட்டும் ஒருபோதும் நிறுத்துவதாயில்லை. அடுத்து x.com எனும் நெட்வொர்க் கம்பெனியை தொடங்குகிறார். ஆனால் அனைத்துப் பங்குகளையும் தானே வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார். இதனால் பெரும் சரிவை சந்திக்க வேண்டிவருகிறது.
இத்தனை தோல்விகளுக்குப் பின்னர் கடந்த 2002 இல் அவர் தொடங்கியது தான் கனவு உலகத் திட்டமான Spacex நிறுவனம். இதில் வெற்றி பெறுவதற்கு முன்பே கடந்த 2003 இல் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெக்ஸ்லா கம்பெனியையும் இவர் தொடங்குகிறார். இப்படி படிப்படியான வளர்ச்சிக்கு பின்னர் நாசாவுடன் சேர்ந்து உலகின் விலை மலிவான விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பி வைத்தார். அதேபோல டெக்ஸ்லா கார்களின் விற்பனையும் தற்போது சூடு பிடித்து இருக்கிறது. இதனால் இவரின சொத்து மதிப்பு உயர்ந்து உலகின் நம்பர் ஒன் பணக்காரர் நிலைக்கு உயர்ந்து இருக்கிறார். இவரது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம். முயற்சியும் கனவும் என்றும் ஓயாமல் இருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments