என்ன தைரியம் இருந்த என்னை பார்த்து: பிரகாஷ்ராஜ் கோபம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் கேள்வி கேட்கும் நேரத்தில் ஒருவர், 'நான் சமீபத்தில் மகேஷ்பாபுவின் 'பாரத் அனே நேனு' படம் பார்த்தேன். அதில் நீங்கள் ஒரு போலீஸ்காரரை அடிப்பது போன்ற காட்சி உள்ளது. நீங்கள் ஒரு நெகட்டிவ் கேரக்டராக இருப்பதால் தான் உங்களுக்கு படக்குழுவினர் வில்லன் வேடத்தை கொடுக்கின்றனரா? என்று கேள்வியை முன்வைத்தார்.
இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த நடிகர் பிரகஷ்ராஜ், 'எப்படி ஒருவரை அவர் நடிக்கும் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவீர்கள். என்னுடைய இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ என்னை வில்லனாக பார்ப்பதில்லை, ஒரு நடிகராகத்தான் பார்ப்பார்கள். ஒரு நடிகரை வில்லன் என்று எப்படி நீங்கள் அழைக்கலாம். நான் உங்களிடம் இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
இந்த விவாதத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, பிரகாஷ்ராஜை அடிக்கடி சினிமா நடிகர் என்றே குறிப்பிட்டார். அவர் ஒரு நடிகர் என்பது உண்மைதான் என்பதால் இது அவருக்கு எந்தவிதத்திலும் இழுக்கில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout