கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் சிகிச்சை செலவு எவ்வளவு?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு முழு சிகிச்சை செலவு இலவசம் என்பது தெரிந்ததே. இருப்பினும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரொனா சிகிச்சையின் செலவு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. பொது வார்டில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் ஒரு கொரோனா நோயாளி குறைந்தபட்சம் 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதால் மொத்தம் 1.65 லட்சம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு 50 ஆயிரம் செலவாகும் என்பதும், 15 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.7.5 லட்சம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்டிலேட்டர் உள்ளிட்ட செலவுகள் தனி என்பதும் வெண்டிலேட்டருக்காக பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்பதும் தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.10 ஆயிரம் செல்வாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் தனியார் மருத்துவமனையில் 15 நாட்கள் கொரோனா சிகிச்சை எடுத்து கொண்டால் பொது வார்டுக்கு ரூ.2.15 லட்சமும், தீவிர சிகிச்சை பிரிவில் ரூ.8.5 லட்சம் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout