இந்த மாதிரி ஆளுங்களை வச்சுகிட்டு கொரோனாவை எப்படி ஒழிக்க முடியும்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக எளிதாக பரவும் என்பதால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அனைத்து நாடுகளின் அரசுகளும், மக்களிடம் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முன் நின்று கொரோனாவுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்யும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்

அவர் சொன்னதன் நோக்கத்தை பலர் புரிந்து கொண்டு வீட்டின் முன்னும், பால்கனியிலும் நின்று கைதட்டி மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலர் நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வீதிக்கு வந்து கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

கும்பல் கும்பலாக ஒருவரை ஒருவர் ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறியது’ என்ற கதை போல நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு எல்லோரும் கூட்டமாக வெளியே வந்து கை தட்டி ஆரவாரம் செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அனைவருக்கும் பரவியிருக்கும் அபாயம் உள்ளது. இந்த மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு எப்படி கொரோனாவை ஒழிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்