ஓட்டுக்கு பணம்: தேர்தலில் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியில்?

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா எப்படி காப்பற்றப்பட்டார் என்ற புதிருக்கு பலருக்கு விடை கிடைக்கவில்லை. ஐஸ்வர்யாதான் வெளியேற 99% வாய்ப்பு இருந்த நிலையில் அவர் காப்பற்றப்பட்டது மட்டுமின்றி அதிக வாக்குகள் பெற்றவராகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவை காப்பாற்ற ஒரு ஓட்டுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுக்கப்பட்டதாகவும், இந்த பணத்தை வாங்கித்தான் ஓட்டுப்போட்டதாகவும் டுவிட்டர் உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது. ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டதை ஆன்லைன் மூலம் காண்பித்தால் பேடிஎம் மூலம் அவர்களுடைய கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் பணம் தருவது போல் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பணம் கொடுத்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யாவை காப்பாற்ற பணம் கொடுக்கப்பட்டது உண்மைதானா? அப்படியென்றால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் இந்த வாரமும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பணம் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த வாரம் ரூ.200 வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியும் மக்களை முட்டாளாக்கும் சூதாட்டம் போல் மாறிவிட்டது வருத்தத்திற்குரியதே