கொரோனா பாதித்த தாய்-மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஹவுஸ் ஓனர்! பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,July 28 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் அஞ்சி ஒதுங்குவதும், அவர்கள் மீது மனித தன்மையற்ற வகையில் நடந்து கொள்வதுமான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஹவுஸ் ஓனர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் சட்டெனப்பள்ளி என்ற பகுதியில் தாய், மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த வீட்டின் ஓனர், உடனடியாக அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி கூட்டியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் வெளியே வரமுடியாமல், சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து ஹவுஸ் ஓனரால் பூட்டப்பட்ட இருவரும் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ஹவுஸ் ஓனரை எச்சரிக்கையும் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்திய நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் ஒரு சில இடங்களில் நடந்து வருவது கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்களை சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது.