நயன்தாரா, காஜல் அகர்வால், வாணிபோஜன்: நவம்பரில் நட்சத்திர கொண்டாட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்னும் திரையரங்கங்கள் திறக்காத நிலையில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இப்போதைக்கு ஓடிடி தளங்கள் மட்டுமே. இதனை அடுத்து ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய திரைப்படங்களையும் புதிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றன
அந்த வகையில் வரும் நவம்பரில் அதிரடியாக தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெளிவர இருப்பதாக ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது
இதன்படி காஜல் அகர்வால், ஆனந்தி, வைபவ் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய வெப்சீரிஸ் ’லைவ் டெலிகேஸ்ட்’ நவம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்யராஜ் சீதா மற்றும் ரக்ஷன் நடித்த ’மை ஃபெர்பெக்ட் ஹஸ்பெண்ட்’ என்ற வெப்சீரிஸ் நவம்பரில் வெளியாக உள்ளது
மேலும் ஜெய், வாணிபோஜன் நடிப்பில் உருவான ’ட்ரிபிள்ஸ்’, தமன்னா நடித்த ’நவம்பர் ஸ்டோரி’ ஆகியவையும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தீபாவளி ஜாக்பாட் ஆக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நவம்பர் கொண்டாட்டம் தான் என ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது
முழுக்க முழுக்க முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மற்ற ஓடிடி தளங்களும் இதேபோன்ற அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால் நவம்பரில் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Disney + Hotstar's brand new list of Tamil original series and film.
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 23, 2020
- Live Telecast ?? Kajal, Vaibhav
- My Perfect Husband ?? Sathyaraj, Sita, Rakshan
- Triples ?? Jai, Vani Bhojan
- November Story ?? Tamannaah
- Mookuthi Amman ?? Nayanthara, RJ Balajipic.twitter.com/TSJVbu6mFO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com