டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸ் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.

'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

More News

இதற்காக தான் சீரியலில் இருந்து விலகினாரா பிரியங்கா நல்காரி? வைரலாகும் புகைப்படங்கள்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'நள தமயந்தி' என்ற சீரியலில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அந்த சீரியலில் விலக இருப்பதாக செய்திகள் பரவியது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது என்பதும் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது என்பதும்

இந்த முறை கல்வி விழாவில் வேற லெவல் திட்டம் வைத்திருக்கும் தளபதி விஜய்.. தவெக நிர்வாகிகள்..!

தளபதி விஜய் கடந்தாண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து சிறப்பு பரிசு கொடுத்தார்

குல தெய்வ வழிபாடு: சக்தி தாசன் அவர்களின் வழிகாட்டுதல்

பிரபல ஆன்மீக அன்பர் சக்தி தாசன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், குல தெய்வ வழிபாடு பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

பாடகி ஸ்ரீநிஷா வாழ்க்கையின் முக்கியமான நபர் ஹிப் ஹாப் ஆதியா ?

மேலும் ஹிப் ஹாப் ஆதி அண்ணா என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் ஆவார்.எனக்கு திருப்பத்தை கொடுத்த படம் என்றால் அவை விளம்பர இடைவெளி படம் தான்...