ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸ்.. அதர்வா நடிக்கும் 'மத்தகம்' பர்ஸ்ட்லுக் ரிலீஸ்..
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான 'மத்தகம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. Screen Scene Media Entertainment தயாரிப்பில், உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் படம் குறித்துக் கூறுகையில், ‘30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் “மத்தகம்”. ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். இந்த சீரிஸுன் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.
The battle begins soon!
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 3, 2023
Hotstar Specials #Mathagam is coming soon on #DisneyPlusHotstar
Teaser is set to release today at 6:30 pm#NightisLong #ComingSoon #MathagamOnHotstar pic.twitter.com/6TnQbpL7kP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com