கோலிவுட் பேய்ப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேய்ப்பட சீசன் இருந்து வருகிறது. அறிமுக நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, லட்சுமிராய் ஆகிய நடிகைகளும் பேயாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'லவ் யூ பங்காராம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்த நடிகை ஷ்ராவாவும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
'வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை புகழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராசாத்தி என்ற கேரக்டரில் ஷ்ராவா பேயாக நடித்து வருகிறார். பேயாக வந்தாலும் கொடூரமான மேக்கப் இல்லாமல் நார்மலான இளம்பெண் போன்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் தன்னுடைய கண்கள் மற்றும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளை வைத்தே இந்த கேரக்டர் பேய் என்பதை ஆடியன்ஸ் புரிந்து கொள்ள முடியும் என்று ஷ்ராவா கூறியுள்ளார்.
நிஜத்தில் தனக்கு பேய் என்றால் கொஞ்சம்கூட பயமில்லை என்றும், இரவில் கூட தன்னால் எந்த பயமும் இல்லாமல் திகில் படங்களை பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout