ஹாட்ஸ்டாரில் 'உப்பு புளி காரம்'.. பிரேக் அப் ஆன காதலனை சந்தித்த சின்மயி வாழ்வில் திருப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாட்ஸ்டாரில் ’உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடர் கடந்த 30ஆம் தேதி முதல் நான்கு எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில் அதன் இரண்டு எபிசோடுகளின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
பொன்வண்ணன் மற்றும் வனிதா தம்பதிக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகள் சின்மயி வழக்கறிஞராக உள்ளார். இரண்டாவது மகள் ஜிம் டிரைனராகவும் மூன்றாவது மகள் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் நபராகவும் உள்ளார். ஒரே மகன் ஐஏஎஸ் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்கிறார்
பொன்வண்ணன் மற்றும் வனிதா தம்பதியர் ஹோட்டல் வைத்திருக்கும் நிலையில் மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மூத்த மகள் சின்மயி அம்மா அப்பாவிற்காக பெண் பார்க்கும் படலத்திற்கு ஒப்புக்கொண்டு, கோர்ட்டுக்கு போய்விட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று செல்கிறார். அப்போது அவர் கோர்ட்டில் எதிர்பாராத விதமாக தனது முன்னாள் காதலர் சிவாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது சிவா தன்னை விட்டு ஏன் பிரிந்தாய் என்று கேட்பதுடன் முதல் எபிசோட் முடிவுக்கு வருகிறது
இரண்டாவது எபிசோடில் தனது காதலி சின்மயி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்த சிவா, கண்டிப்பாக நீ என்னை தான் திருமணம் செய்து கொள்வாய்? நீ என்னை பிரிந்ததற்கான காரணத்தை இப்போது சொல்லாவிட்டாலும் விரைவில் சொல்வாய் என்று கூறிய நிலையில் சின்மயி, ‘இன்று என்னை பெண் பார்க்க வருகிறார்கள், நான் இன்று மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று சொல்லி திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூறுகிறார். அப்போது சிவா நிச்சயமாக இந்த திருமணம் நடக்காது என்று சவால் விடுவார்.
இந்த நிலையில் முன்னாள் காதலன் சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று சின்மயி சொல்வார். ஆனால் மாப்பிள்ளை பெண்ணுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறி இருவரும் பேசிய பின்னர் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அந்த திருப்பம் என்ன? சின்மயிக்கு திருமணம் நடக்குமா? சிவா விட்ட சவாலில் வெற்றி பெறுவாரா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்,
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா உட்பட பலர் நடித்துள்ளனர். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த தொடரை எம். ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments