ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சீரிஸின் அசத்தலான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காக திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை டிரெய்லர் காட்டுகிறது. தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்க தீர்மானிக்கின்றனர்.
நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான குண்டர் கும்பலின் தலைவராக தோன்றுவதையும் இந்த டிரெய்லர் நமக்குக் காட்டுகிறது. இந்த பரபரப்பான தொடரில் குக்கு வித் கோமாளி புகழ் புகஜ் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார்.
ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இமான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருங்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments