அடுத்த தரமான நேரடி ரிலீஸ்: முன்னணி நடிகையின் சொந்த படத்தை ரிலீஸ் செய்யும் ஹாட்ஸ்டார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஹாட்ஸ்டார் அடுத்தடுத்து நேரடி தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’O2' என்ற திரைப்படத்தை சமீபத்தில் நேரடியாக ரிலீஸ் செய்த ஹாட்ஸ்டார், விரைவில் சிபிராஜ் நடித்துள்ள ‘வட்டம்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது
இந்த நிலையில் தனது அடுத்த தரமான ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்து தயாரித்த திரைப்படம் ‘கேடவர்’. இந்த படமும் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
அமலா பால் முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அனு பணிக்கர் என்பவர் இயக்கியுள்ளார்.
அடுத்த தரமான Release ?? #Cadaver - Coming Soon.. #CadaverOnDisneyplusHotstar #DisneylusHotstarMultiplex @Amala_ams @harishuthaman @ThrigunAactor @AthulyaOfficial @riythvika @AmalaPaulProd @thanzeersalam @AnnicePaul6 @dinesh_WM @SureshChandraa @anoop_panicker @thinkmusicindia pic.twitter.com/RyzjZoxzNG
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) July 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments