அடுத்த தரமான நேரடி ரிலீஸ்: முன்னணி நடிகையின் சொந்த படத்தை ரிலீஸ் செய்யும் ஹாட்ஸ்டார்!

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஹாட்ஸ்டார் அடுத்தடுத்து நேரடி தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’O2' என்ற திரைப்படத்தை சமீபத்தில் நேரடியாக ரிலீஸ் செய்த ஹாட்ஸ்டார், விரைவில் சிபிராஜ் நடித்துள்ள ‘வட்டம்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது

இந்த நிலையில் தனது அடுத்த தரமான ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்து தயாரித்த திரைப்படம் ‘கேடவர்’. இந்த படமும் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

அமலா பால் முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அனு பணிக்கர் என்பவர் இயக்கியுள்ளார்.

More News

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: செம கில்லர் படம் என தகவல்!

பிரபுதேவா நடிப்பில் உருவான 'மை டியர் பூதம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் குழந்தைகளுக்கான படம்

'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு இத்தனை ஆயிரம் திரையரங்குகளா?

தொழிலதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்'திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் வெளியாக

வைரலாகும் டி ராஜேந்தரின் அமெரிக்க புகைப்படங்கள்: சென்னை திரும்புவது எப்போது?

நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக மேல் சிகிச்சை பெற அமெரிக்கா சென்ற நிலையில் அவர் சென்னை திரும்புவது எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

லெஜண்ட் சரவணனுக்காக தமன்னா செய்த காரியம் என்ன தெரியுமா? வைரல் வீடியோ!

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ' தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரு புதுமுக நடிகரின் படம் என்ற எண்ணமே இல்லாமல் மாஸ் நடிகரின் படம் போல்

'இரவின் நிழல்' படம் பார்த்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.