டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரிஜினல் சீரிஸ் 'மத்தகம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மத்தகம் சீரிஸின் ட்ரெய்ல சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

இயக்குநர் பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள மத்தகம் சீரிஸில் நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் மற்றும் டிடி (திவ்யதர்ஷினி) முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட டிரெய்லர், அதர்வா மற்றும் மணிகண்டனின், இதயம் அதிரச்செய்யும் ஆக்சன் அதிரடியில், ஒரு அட்டகாச பொழுதுபோக்கை இந்த சீரிஸ் தரும் என்பதை உறுதி செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

சமீபத்தில் திரையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான குட் நைட் திரைப்பட கதாநாயகன் மணிகண்டன் முதல் முறையாக வில்லனாக நடிக்கும் இந்த சீரிஸில் அதர்வா நேர்மை மிகுந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸை Screen Scene Media Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

இந்த சீரிஸில் பரபரப்பான ஆக்சன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.

More News

கிளாமர் உடையில் மழையில் நனையும் 'கங்குவா' நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை மற்றும்

தாய்லாந்து தீவில் நண்பர்களுடன் கீர்த்தி சுரேஷ்.. செம்ம வீடியோ வைரல்..!

சமீபகாலமாக தமிழ் நடிகைகள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் பிரியா வாரியர் ஆகியோர் சமீபத்தில் தாய்லாந்து

6 நாட்களுக்கு பின் குழந்தை பிறந்ததை அறிவித்த இலியானா.. க்யூட் புகைப்படம் வைரல்..!

நடிகை இலியானாவுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.  

இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை... பிக்பாஸ் பிரபலத்தின் மடியில் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டில் விளையாடும் போது ஒருவருக்கு ஒருவர் போட்டியுடன், ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே

அஜித்தின் 'விடாமுயற்சி'யில் இந்த 4 பிரபலங்களும் உறுதி.. வேற லெவல் தகவல்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிய நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பது