எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? 'ஏ' சர்டிபிகேட் பெற்ற கலையரசன் படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கலையரசன், சாண்டி உள்பட பலர் நடித்த ’ஹாட்ஸ்பாட்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த ட்ரெய்லருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? என்பது உட்பட பலருடைய கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளது.
கலையரசன், சாண்டி, அம்மு அபிராமி, சோபி, ஜனனி உள்பட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஹாட்ஸ்பாட்’. இந்த படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் முடிந்து ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற விளம்பரத்துடன் படக்குழுவினர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த கண்டனங்களை பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பாக எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? என்ற கண்டனமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களைப் பற்றி விமர்சனம் செய்த பதிவுகளையே விளம்பரமாக பயன்படுத்தி உள்ள படக்குழுவினரின் யுக்தி எந்த அளவுக்கு படத்தின் வெற்றிக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Hotspot - An "A" certified film, Strictly not for kids below 18#HotSpotFromMarch29th@vikikarthick88 #Sevenwarriors @Veyilonent @SixerEnt @KalaiActor @iamSandy_Off @Gourayy @Ammu_Abhirami @jananihere @AadhityaBaaskar pic.twitter.com/JhIWbWbZfg
— Rajasekar (@sekartweets) March 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments