சூடான வெட்டுகிளி ஃபிரை, பிரியாணி, சூப் என அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக வெட்டுகிளிகளின் படையெடுப்பை குறித்து நம் மக்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவ்வளவு வெட்டுகிளிகள் எங்கிருந்து வந்தது என வியப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் நமது ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களில் கிட்டத்தட்ட 24 மாவட்டங்களை சூறையாடி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து படையெடுக்கும் இந்த வெட்டுகிளிகளை எப்படி ஒழிப்பது என பல நாடுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வளவு ஏன் கடும் கருத்து முரண்பாடுகளைக் கொண்ட பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளும் வெட்டுகிளிகளை ஒழிப்பதற்கு ஒன்றாக இணைந்து செயல் திட்டங்களை தீட்டியிருக்கிறது. மேலும் சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்க முன்வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் ஒலியை எழுப்பியும் அரசாங்கம் பூச்சிக்கொல்லியைத் தெளித்தும் இதனை விரட்டி வரும் நேரத்தில் நமது ராஜஸ்தான் உணவகங்கள் ஒரு புது யோசனையைக் கையாண்டு இருக்கிறது. எனது விளைநிலங்களை நாசப்படுத்திய உன்னை வறுத்து தின்றால் என்ன? உடனடியாக வெட்டுகிளி, ஃப்ரை, சூப், டீப் ஃப்ரை எல்லாம் சாப்பிடுவதற்கு ரெடியாகி விட்டது. இதுவரை வெட்டுகிளிகள் எந்த நோய்த்தொற்றையும் மனிதர்களுக்கு ஏற்படுத்தியதாக எந்த தரவுகளும் இல்லை. அதோடு வெட்டுகிளிகள் பயிர்களை மட்டும் உண்ணகிறது என்பதால் உடலுக்கு எந்த தீங்கையும் இது ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது. விலங்கு, மனிதனையும் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு தாக்குவதில்லை. எனவே மிக எளிதாக பிடித்து பொறித்து திங்க வேண்டியதுதான். இப்படியாவது கொஞ்சம் குறையட்டும் என நமது வாடிக்கையாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். அதோடு வெட்டுகிளிகள் அதிக புரதம் நிறைந்த உணவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனா, திபெத் போன்ற நாடுகளில் இந்த மாதிரியான பூச்சி வகை உணவுகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments