ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டலா? மில்லியன் கணக்கில் குவியும் வருமானம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சவுதி அரேபியா நாட்டில் ஒட்டகங்களுக்கு ஸ்டார் ஹோட்டல் கட்டிய நபர் மில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டிவருகிறார். இதுகுறித்த தகவல் தற்போது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சவுதியின் ரியாத் அருகே ஒவ்வொரு ஆண்டும் கில் ஆப்தலொஜிஸ் எனும் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் ஒட்டகங்கள் பங்குகொள்ளும் பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு வரும் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கவும் அவற்றிற்கு உணவு, மருந்து போன்ற பராமரிப்புகளுக்காகத் தற்போது டாப்மேன் எனும் பெயரில் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்பட்டு இருக்கிறது.
திறந்த பாலைவன மணலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த ஹோட்டலில் ஒட்டகங்களுக்கு சூடான பால் மற்றும் இதர உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஒட்டகங்களின் முடியை கத்தரித்து அவற்றை போட்டிக்கும் தயார் படுத்தவும் செய்கின்றனர். நோய்வாய்ப்பட்ட ஒட்டகங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பும் கொடுக்கப்படுகிறது. இப்படி தங்கும் ஒவ்வொரு ஒட்டகங்களுக்கும் ஒருநாள் இரவிற்கு 400 ரியால் வசூலிக்கப்படுகிறது.
உமைர் அல் கஹ்தானி என்பவர்தான் இப்படியொரு வித்தியாசமான ஹோட்டலை உருவாக்கியிருக்கிறார். மேலும் 66.6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டல் மூலமாக அவர் தற்போது மில்லியன் கணக்கில் வருமானத்தை குவித்தும் வருகிறார். மேலும் இந்த ஹோட்டலில் ஒட்டகங்களைத் தங்க வைப்பதோடு சில ஒட்டகங்களை அவர் வாடகைக்கும் விடுகிறார். இதனால் கொரோனா காலத்தில் உமைர் அல் கஹ்தானி உலக அளவில் கவனிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வித்தியாசமான இந்த ஹோட்டல் குறித்து பேசிய கஹ்தானி கடந்த வருடம் திருவிழாவின்போது ஒட்டகங்கள் பராமரிப்பு இன்றி தவித்து வருவதைப் பார்த்தேன். எனவே புதுமையான வகையில் ஒட்டகங்களுக்கு ஹோட்டல் அமைக்க முடிவெடுத்தேன். போட்டிகளில் பங்கு கொண்டு மில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கும் இந்த ஒட்டகங்களுக்கு இதுபோன்ற பராமரிப்பு அவசியம்தான் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout