விஜய்யின் வெற்றி நாயகிகள்
கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமாகிய விஜய், 25 வருடங்கள் தொடர்ந்து திரையுலகில் வெற்றி நாயகனாக நீடித்து இருப்பது மட்டுமின்றி 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் எப்படி ஸ்லிம் ஆக இருந்தாரோ அதேபோல் இன்றும் ஸ்லிம் மற்றும் ஸ்டைலாக உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ஆரம்பகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போது திரையுலகில் இருந்து விலகியும், அம்மா, அக்கா, அண்ணி வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் விஜய் மட்டும் இன்னும் கல்லூரி மாணவர் வேடத்தில் கூட நடிக்கும் நிலையில் உள்ளார். விஜய் நடித்து முடித்துள்ள 61 படங்களில் பல நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். விஜய்யுடன் நடித்த ஒருசில ஹீரோயின்கள் குறித்து தற்போது பார்ப்போம்
கீர்த்தனா:
விஜய் ஹீரோவாக அறிமுகமாகிய படத்தில் நடித்தவர். விஜய்யின் முதல் நாயகியான இவர் மீண்டும் 'மாண்புமிகு மாணவன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தாலும் அதன் பின்னர் திரையுலகில் பெரிதாக ஜொலிக்கவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் இவர் பிரசன்னாவுக்கு அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராணி:
விஜய்யின் இரண்டாவது படமும் கேப்டன் விஜயகாந்துடன் விஜய் நடித்த படமுமான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யுவராணி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கும் யுவராணிக்கும் இடையே நடக்கும் கபடிப்போட்டி அந்த கால இளசுகளுக்கு ஒரு நல்ல தீனி. இந்த படத்திற்கு பின்னர் யுவராணி ஒருசில படங்களில் நாயகியாக நடித்தாலும் அதன் பின்னர் பல படங்களில் தங்கை, அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சிங்கம் 3' படத்தில் சூர்யாவின் அக்காவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கவி:
ஆரம்பகால கட்டத்தில் விஜய்க்கு ராசியான நாயகி இவர்தான். ரசிகன்' படத்தில் ஆரம்பித்த இந்த ஜோடி அதன் பின்னர் 'விஷ்ணு', 'கோயமுத்தூர் மாப்ளே' போன்ற படங்களில் நீடித்தது. இருப்பினும் இவரும் காலப்போக்கில் அக்கா, அண்ணி மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிவிட்டார்
சிம்ரன்:
விஜய்க்கு ராசியான நாயகி என்ற பட்டியல் கணக்கிட்டால் அதில் முதல் இடம் பிடிப்பவர் இவர்தான். விஜய்-சிம்ரன் நடித்த படங்கள் கிட்டத்தட்ட எல்லாமே வெற்றி தான். 'ஒன்ஸ்மோர், 'நேருக்கு நேர்', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ப்ரியமானவளே, ;'உதயா', போன்ற படங்களில் விஜய்யுடன் சிம்ரன் நடித்தார்.
ஷாலினி:
'காதலுக்கு மரியாதை', ''கண்ணுக்குள் நிலவு' ஆகிய இரண்டே படங்களில்தான் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். இருப்பினும் 'காதலுக்கு மரியாதை' படம் இன்றளவும் மிகச்சிறந்த ஒரு காதல் படமாக கோலிவுட் திரையுலகில் இருந்து வருகிறது. ஜீவா, மினி கேரக்டர்களை ரசிகர்கள் இன்றும் ஞாபகம் வைத்திருக்கின்றனர்.
தேவயானி:
'நினைத்தேன் வந்தாய்' என்ற அருமையான ரொமான்ஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கள்ளங்கபடம் இல்லாத வெகுளிப்பெண் கேரக்டரில் தேவயானி நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் அவர் விஜய்யுடன் 'மீண்டும் 'பிரெண்ட்ஸ்' படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரம்பா:
'என்றென்றும் காதல்', 'நினைத்தேன் வந்தாய்', 'மின்சாரக்கண்ணா' ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா நடித்தார்.
ஜோதிகா:
விஜய்யுடன் ஜோதிகா நடித்த படங்கள் இரண்டே இரண்டு தான். ஆனால் இரண்டுமே நல்ல ஹிட். முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான 'குஷி' மற்றும் முழுக்க முழுக்க ஆக்சன் படமான 'திருமலை' என இரண்டிலும் ஜோதிகா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
ப்ரியங்கா சோப்ரா:
கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா நடித்த முதல் படம் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படம் தான். இந்த படத்திற்கு பின்னர் அவர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக மாறி தற்போது ஹாலிவுட்டிலும் ஜொலித்து வருகிறார்.
த்ரிஷா:
விஜய்க்கு மற்றுமொரு ராசியான நாயகியாக த்ரிஷாவை கூறுவதுண்டு. விஜய்யுடன் இணைந்து நடித்த 'கில்லி' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' என இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் நடித்த நடிகை ஒருவர் இன்னும் திரையுலகில் நாயகியாக ஜொலித்து வருபவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
அசின்:
விஜய்யுடன் த்ரிஷா நடித்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆனதால் இந்த ஜோடி தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஜோடிகளில் ஒன்றாக அமைந்தது. 'சிவகாசி', 'போக்கிரி' மற்றும் 'காவலன்' ஆகிய மூன்று படங்களிலும் இந்த ஜோடி வெற்றிஜோடியாக வலம் வந்தது
நயன்தாரா:
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாரா விஜய்யுடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஜோடியாக நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் வெளியான 'வில்லு' படத்தில் விஜய்யுடன் இணைந்து கவர்ச்சி மற்றும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் விஜய் நடித்த 'சிவகாசி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
காஜல் அகர்வால்:
'துப்பாக்கி' படத்தில் விஜய்-காஜல் ஜோடி மிகச்சிறப்பாக அமைந்ததால், மீண்டும் 'ஜில்லா' படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார். இதனையடுத்து தற்போது 'தளபதி 61' படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா:
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, விஜய்யுடன் முதலில் 'கத்தி' படத்தில் இணைந்தார். பின்னர் மீண்டும் அட்லி இயக்கத்தில் 'தெறி' படத்தில் விஜய்யுடன் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றதையடுத்து தற்போது 'தளபதி 61' படத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார்
மேலும் சச்சின், வேலாயுதம் படங்களில் ஜெனிலியா, புலி படத்தில் ஸ்ருதிஹாசன், வேலாயுதம், புலி படங்களில் ஹன்சிகா, பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களும் விஜய்யுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகைகள் ஆவர்

கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் அறிமுகமாகிய விஜய், 25 வருடங்கள் தொடர்ந்து திரையுலகில் வெற்றி நாயகனாக நீடித்து இருப்பது மட்டுமின்றி 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற படங்களில் எப்படி ஸ்லிம் ஆக இருந்தாரோ அதேபோல் இன்றும் ஸ்லிம் மற்றும் ஸ்டைலாக உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ஆரம்பகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதĬ