இன்று முதல் 5 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்: வானிலை மையம் அறிவுறுத்தல்!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது இன்று முதல் ஏப்ரல் 4 வரை அனல் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது
இதனால் தேர்தல் பரப்புரை செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் காற்று வீசும் என்ற தகவல் பொதுமக்களை அச்சுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது