மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி

  • IndiaGlitz, [Saturday,January 07 2017]

கடந்த 2008ஆம் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் கதையான '1818' என்ற படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்த திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க 90களின் பிரபல நடிகை ரோஹினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

கோவையை சேர்ந்த அரவிந்தன் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'தெளிவுப்பாதையின் நீச தூரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சந்தோர்ஸ் மற்றும் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஞானப்பன் சிவா, சர்தார், பிரபாகர் சண்முகம் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். கோவை வெடிகுண்டு குறித்து சுமார் 2 வருடங்கள் ஆய்வு செய்து இந்த வெடிகுண்டு சம்பவம் எதனால் நடத்தப்பட்டது என்பதை தெளிவுபடுத்துவதுதான் இந்த படத்தின் நோக்கமாம்.

இந்த வெடிகுண்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மற்றும் மதத்தலைவர்கள், இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் ஆகியோர்களிடம் நேரடியாக சென்று நடந்ததை அறிந்து கொண்டு அதன் பின்னர் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை குண்டுவெடிப்பு மற்றும் கோவை குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருவதும் அதில் த்ரிஷா மற்றும் ரோஹினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மம்முட்டியுடன் இணையும் பிரபல தமிழ் ஹீரோ

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில்

விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிரி' பொங்கல் திருநாள் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி சமீபத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஷால் சஸ்பெண்டை திரும்ப பெற முடியாது. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

சசிகலா அக்கா மகனுக்கு ரூ.28 கோடி அபராதம். உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991ஆம் ஆண்டு முதல்வர் பதவியை முதன்முதலில் ஏற்றபோது அவருடைய தோழி சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் முதலீடு இருந்ததாக கூறப்பட்டது.