விக்ரம் பிரபுவுக்கு 'லிப்லாக்' கொடுக்க ஷாம்லி தயங்கியது ஏன்?

  • IndiaGlitz, [Friday,September 09 2016]

சமீபத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளிவந்த 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வீரசிவாஜி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக ஷாலினி அஜித்தின் தங்கை ஷாம்லி நடித்துள்ளார்.
விக்ரம்பிரபுவுவின் ஜோடியாக ஷாமிலி முதன்முறையாக நடித்தாலும் இருவரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள்தான். நிஜத்தில் விக்ரம் பிரபுவின் உடன்பிறந்த தங்கையுடன் படித்தவர்தான் ஷாம்லி.
எனவே தோழியின் அண்ணனுடன் காதல் காட்சியில் நடிக்க ஷாம்லி முதலில் தயங்கியதாகவும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'லிப்லாக்' காட்சியில் நடிக்க அவர் மிகுந்த சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் உருவாகியுள்ள 'வீரசிவாஜி' படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

More News

காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல்...

முதன்முதலாக சீனியர் நடிகருக்கு ஜோடியான அமலாபால்

கோலிவுட் திரையுலகில் நடிக்கத்தெரிந்த மிகக்குறைந்த நடிகர்களில் ஒருவராகிய அமலாபால், சமீபத்தில் தனுஷூக்கு ஜோடியாக 'வடசென்னை'...

'இருமுகன்' முதல்நாள் தமிழக வசூல் நிலவரம்

'அரிமா நம்பி; ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்த 'இருமுகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

'பைரவா' டைட்டிலில் ஒளிந்துள்ள ஐந்து முக்கிய ரகசியங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 60 வது படத்தின் டைட்டில் 'பைரவா' என கடந்த வாரம் அறிவித்தவுடன் இணையதளங்கள் அதிரும் வகையில்

சிம்பு படத்தில் நடிக்க்கும் தமன்னா-ஸ்ரேயா கேரக்டர்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே....