பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி-சமந்தா

  • IndiaGlitz, [Monday,October 31 2016]

'ஆரண்ய காண்டம்' என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். முதன்முதலாக விஜய்சேதுபதியுடன் சமந்தா நடிக்கவுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.