திருமணம் குறித்து சமந்தாவின் உறுதியான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

தென்னிந்தியாவின் முன்னணி நாயகி சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார் என்பதும் இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த தகவல் தற்போது சமந்தாவின் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமந்தா, நாகசைதன்யா, நாகசைதன்யாவின் சகோதரர் அகில், அகிலின் காதலி ஸ்ரேயா ஆகிய நான்கு பேர் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து 'இது என்னுடைய குடும்பம்' என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சமந்தா தனது திருமணத்தை முழு அளவில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில்-ஸ்ரேயா திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சமந்தா தற்போது விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் விஷாலுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.