மணிரத்னம் படத்தில் இணைந்த பரதநாட்டிய நடிகை
Saturday, July 23, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படங்களில் நாயகன், நாயகியை தவிர சப்போர்ட்டிங் நடிகர்களாக ஒருசில பிரபலங்கள் நடித்து வருவதை பார்த்து வருகிறோம். 'ஓகே கண்மணி' படத்தில் கூட சென்சார் அதிகாரியான 'லீலா சாம்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்திலும் இதேபோன்ற ஒரு பிரபலம் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரபல பரதநாட்டிய நடனக்கலைஞரும் நடிகையுமான ருக்மணி விஜயகுமார் இந்த படத்தில் புதியதாக இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே பாரதிராஜாவின் 'பொம்மல்லாட்டம்', 'ஆனந்த தாண்டவம்', ரஜினியின் 'கோச்சைடயான், தனுஷின் 'ஷமிதாப்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, அதிதிராவ் ஹைத்ரி, ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மணிரத்னம் அவர்களின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டி அருகே விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments