இலங்கையும் எனக்கு பிடித்த நாடுதான். மன்னிப்பு கேட்க முடியாது. ரம்யா அதிரடி பதில்
- IndiaGlitz, [Wednesday,August 24 2016]
பாகிஸ்தானை நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியதால் அவருக்கு எதிராக ஒருசில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன என்றும் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது தேசத்துரோக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பேச்சு குறித்து ரம்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் இந்த நாட்டை விட்டே போக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தன்னுடைய பேச்சில் எவ்வித தவறும் இல்லை என்றும், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நடிகை ரம்யா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியபோது, 'எல்லையால் நாடுகள் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளது என்பதற்காக பிற நாட்டு மக்களை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஒருவர் கூறிய கருத்தை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இதுதான் ஜனநாயகம். இந்த கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பது அகம்பாவம் அல்ல. இதற்கு மன்னிப்பு கேட்பது, சரியான நடைமுறையாக இருக்காது என்பதால்தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறுகிறேன்.
எனக்கு பாகிஸ்தான் மட்டுமின்றி வங்கதேசத்தையும் இலங்கையையும் பிடிக்கும், அதற்காக நான் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனது நாய்களை விட்டும் போகப்போவதில்லை' என்று கூறியுள்ளார். ரம்யாவின் இந்த பதில் போராட்டம் செய்து வரும் அரசியல் கட்சிகளை மேலும் சூடேற்றியுள்ளது.